உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவம் எங்களுடையது என்பதை ஈரான் உணரவில்லை என நினைக்கிறேன்

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈராக்கில் அல் அஸாத் எனுமிடத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 80 பேர் பலியாகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 200 அமெரிக்க ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.