எங்களோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சுடாதீங்க : ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

உலகிலேயே சக்திவாய்ந்த ராணுவம் எங்களுடையது என்பதை ஈரான் உணரவில்லை என நினைக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.


ஈரான் மக்களின் கதாநாயகனாக கருதப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்க ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். தங்கள் நாட்டின் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்காவுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வந்தது.