கண் முன்னே அம்மாவை கொன்றார்... 6 வயது மகன் வாக்குமூலம்... இளம்பெண் மரணத்தில் திருப்பம்!

திருமண உறவை மீறிய காதலால் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இரண்டரை மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஆனேக்கல் பகுதியை அடுத்த சென்னராயணபாளையா கிராமத்தில் வசித்து வந்தவர் சுமலதா. இவரது கணவர் தேவராஜ். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சுமலதாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக கருதி, அவரது உடலை உறவினர்கள் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சுமலதா கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது 6 வயது மகனான ரவி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.